புதன், 27 ஜனவரி, 2010

ஸ்பெஷல் கடாய் சிக்கன்



தேவையானப் பொருட்கள்:
சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு
செய்முறை:
* சிக்கனை சுத்தமாகி மீடியமான சைசில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடிஇஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை ஏலம் கிராம்பு போட்டு வாசனைவந்ததும் கட்செய்த பல்லாரி தக்காளி மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி போட்டுநன்றாக வதக்கவும்.

* மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டுமூடி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.

* மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு
சிக்கன் நன்றக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதைஅதனுடன் சேர்த்துகிளரவும்.

* அடுப்பை சிம்மில் வைத்தே இத்தனையும் செய்யவும்
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக