புதன், 27 ஜனவரி, 2010

தந்தூரி சிக்கன்


தேவையானப் பொருட்கள்:
கோழி - 1 முழுதாக
பெரிய வெங்காயம் - 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
தயிர் - அரை கப்
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சம் பழம்
உப்பு
கிராம்பு தூள்
செய்முறை:
தந்தூரி சிக்கனை சமைக்க ஓவன் வேண்டும்.


இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

தயிரை அடித்து அதனுடன் இந்த விழுதையும், மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகம், கிராம்பு தூள், வினிகர், எலுமிச்சாம் சாறு, வெண்ணெய், உப்பு எல்லாம்சேர்த்து கிளறி வைக்கவும்.

கோழியை முழுசாக வைத்துக் கொண்டு வயிற்றுப் பகுதியை மட்டும் கீறி சுத்தம்செய்யவும்.

இப்படியே கடையில் கேட்டாலும் தருவார்கள்.

தசைப் பகுதியில் அங்கங்கே கத்தியால் கீறிவிடவும்.

தயிரில் கலந்த மசாலாவை வயிற்றுப் பகுதியில் கொஞ்சம் வைக்கவும். மீதத்தைகோழியின் மீது நன்கு தடவி சில மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த கோழியை ஓவனில் வேக விடவும். 20 அல்லது 40 நிமிடங்களில்தந்தூரி சிக்கன் தயார்.

ஸ்பெஷல் கடாய் சிக்கன்



தேவையானப் பொருட்கள்:
சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு
செய்முறை:
* சிக்கனை சுத்தமாகி மீடியமான சைசில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடிஇஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை ஏலம் கிராம்பு போட்டு வாசனைவந்ததும் கட்செய்த பல்லாரி தக்காளி மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி போட்டுநன்றாக வதக்கவும்.

* மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டுமூடி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.

* மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு
சிக்கன் நன்றக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதைஅதனுடன் சேர்த்துகிளரவும்.

* அடுப்பை சிம்மில் வைத்தே இத்தனையும் செய்யவும்
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

சீலா மீன் பிஸ்கேட்


தேவையானப் பொருட்கள்:
சீலா மீன் - 10 துண்டுகள்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்ன்றை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்ட
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
கார்ன் பிளார் மவு - ஒரு மேசை கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு - அரை மேசிஅ கரண்டி
எண்ணை மீன் - பொரிக்க தேவையான அளவு
எலுமிச்சைஒன்று
செய்முறை:
* மீனை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவேண்டும், மற்ற பொருட்களையும்தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

* எலுமிச்சை பழ சாறில் எல்லா மசாலாக்களையும் ஒன்றாக பேஸ்ட் போல்குழைக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீரும் தெளித்து கொள்ளலாம்.

* மீனில் மசாலாவை நன்கு தடவி பிறட்டி வைக்கவும்.

* எல்லாவற்றையும் ஒன்றாக அடுக்கி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

* ஒரு நான் ஸ்டிக் பேனில் தேவைக்கு எண்ணை ஊற்றி கொள்ளும் அளவுபொட்டு பொரிக்கவேன்டும்.தீயை மீடியமாக வைத்து கொள்ள வேண்டும்.

* இரண்டு பக்கமும் நன்கு வெந்து மொருகலாக வரும் போது எடுக்க வேண்டும்.

* சுவையான மீன் பிஸ்கேட் ரெடி.

TIPS:

சிக்கன் மசாலா இல்லை என்றால் மிளகாய் தூளே போதுமானது.சிறிது மிளகுதூள் சேர்த்தாலும் நல்ல இருக்கும்.

மீன் படத்தில் சிறிது திக்கான மீனாக இருக்கு, இது இன்னும் மெல்லியதாகஇருந்தால் இன்னும் நல்ல இருக்கும்.

பொரிக்கும் போது சிறிது பட்டர் எண்ணையுடன் சேர்த்து பொரித்தால் சுவைஇன்னும் அபாரமாக இருக்கும்.

ருசியான கொடுவாமீன் ஃபிரை


தேவையானப் பொருட்கள்:
கொடுவாமீன் பீஸ் 4
சோளமாவு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
முட்டை 1
லெமஞூஸ் கொங்சம்
கெச்சப் 1 ஸ்பூன்
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப

செய்முறை:
டெக்கரேஷனுக்கு பல்லாரி ,மிளகாய் மீனை நன்றாக கழுவவும் ஒருபிளேட்டில்சோளமாவு மிளகாய்தூள் லெமன் ஜூஸ் கெச்சப் முட்டையின் வெள்ளைக்கருஊற்றவும் உப்பு போட்டு நன்றாக கலக்கிவிடவும் அதில் மீனை போட்டு எல்லாஇடங்களிலும் மசாலா தடவவும்.

அதனை10 நிமிடம் ஊறவைக்கவும் நான்ஸ்டிக்பேனில் ஆயில் 3 ஸ்பூன் விட்டுசூடாக்கவும் ,அதில் மீனைப்போடவும்.

வெந்ததும் திருப்பிபோட்டு கொஞ்சநேரம்வைத்து எடுக்கவும்,அதே பேனில்முட்டையின் மஞ்சள்கருவுடன் சிறிது உப்பு மிளகுதூள்போட்டுஅடித்துகொள்ளவும்,
அதனை தோசை போல்ஊற்றவும்

அதுரெடியானதும் ஒரு பிளேட்டில் இந்தமுட்டையை வைத்து அதன்மேல்இந்தமீன்களை வைத்து வட்டமாக நறுக்கிய பல்லாரியை நீலவாக்கில் நறுக்கிய,மிளகாயை சுற்றிலும் வைத்து அலங்கரித்துப்பரிமாரவும் இந்தமீன்ஃபிரை நல்லருசியாக இருக்கும்.

இறால் ப்ரை &கிரேவி


தேவையானப் பொருட்கள்:
சின்ன வெங்காய் - 100 கிராம்
தக்காளி- 1
இறால்-15
பச்ச மிளகாய்-1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
மஞ்சள்த்தூள்-சிறிது
தேங்காய்பூ-1ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
பூண்டு-6பல்
உப்பு, எண்ணெய்-தேவைக்கு


செய்முறை:
* சின்ன வெங்காயம், தக்காளி, இறாலை நறுக்கி தனியாக வைக்கவும் கடாயில்எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்

* நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது, .பிலை, மஞ்சள்த்தூள், .மிளகாய் போட்டு வதக்கவும்

* பிறகு மிளகாய்த்தூள், தக்காள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்

* நன்றாக கொதி வரும் பொழுது இறால்,,தேங்காய் பூ, தட்டிய பூண்டு போட்டு 5 -8 நிமிடம் வேக வைக்கவும்.

* நன்றாக வதங்கிய பிறகு இறக்கவும்.
சூடான பருப்பு, சாம்பார் சாதத்துடன் சாபிடலாம்